Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 12 , மு.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் மறைந்த தலைவரும் கோட்டே நாக விஹாரையின் விஹாராதிபதியுமான சோபித தேரரின் பூதவுடல், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள நாடாளுமன்ற விளையாட்டுத்திடலில், இன்று 12 ஆம் திகதி வியாழக்கிழமை 3 மணிக்குத் தகனம் செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்றைய தினத்தைத் தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம், இறுதிக் கிரியைகள் யாவும் பூரண அரச மரியாதையுடனான கௌரவத்துடன் இடம்பெறும் என அறிவித்துள்ளது.
இன்றைய தினம், தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் யாவும் மூடப்பட்டிருக்கும் எனவும் அரசாங்;கம் அறிவித்துள்ளது. இதேவேளை, திரையரங்குகளும் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் சுகவீனமுற்றிருந்த மாதுலுவாவே சோபித தேரர், சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் மூன்றுநாட்களாக சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை(08) 5.50க்கு (இலங்கை நேரப்படி அதிகாலை 3.20க்கு) இறைபதம் அடைந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago