Kogilavani / 2017 ஏப்ரல் 09 , பி.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இலங்கைக்கு நேராக தற்போது சூரியன் உச்சம் கொடுப்பதால், கண் நோய் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது” என, இலங்கை கண் வைத்திய சங்கத்தின் செயலாளர் தில்ருக்ஷி ஆரியசிங்க தெரிவத்தார்.
கடந்த 4ஆம் திகதி முதல், இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுப்பதால், அதிக வெப்பமான காலநிலைகாணப்படுகின்றது.
அதிக வெப்ப காலநிலை காரணமாக, கண்களில் பிரச்சினை ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால், சூரிய ஒளியானது நேரடியாக விழும் இடங்களில் அதிகம் நடமாடுவதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு, சூரியன் உச்சம் கொடுத்துள்ளதால், நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை 34 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பானது, படிப்படியாக, யாழ்ப்பாண மாவட்டம் வரை சென்று, எதிர்வரும் 15ஆம் திகதியன்று வழமைக்கு திரும்பும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .