Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 03 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற அரச மற்றும் அரச சார்பற்ற சேவையில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பான தொகைமதிப்பு, எதிர்வரும் 17ஆம் திகதி, நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.ஜே. சத்தரசிங்க தெரிவித்தார்.
பொதுவாக நான்கு வருடங்களுக்கொரு முறை நடத்தப்படும் இத்தொகைமதிப்பு, இம்முறை 11ஆவது தடவையாக நடத்தப்படவிருக்கின்றது.
தகவல் சேகரிக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யும் பொருட்டு, இத்தொகைமதிப்பு, சகல அரச மற்றும் அரச சார்பற்ற சேவையில் ஈடுபட்டுள்ளோரின் பங்களிப்புடன், குறித்த தினத்தன்று, காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரையான நேரப்பகுதியில் மேற்கொள்ளப்படுமெனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொகைமதிப்பு சம்பந்தமாக இங்கு உள்ளடக்கப்பட்ட தகவல்களைத் தொகைமதிப்புத் தினத்துக்கு முன் பரிசீலித்து, இத்தொகைமதிப்பை வெற்றிகரமாக மேற்கொள்ள ஒத்துழைக்குமாறு தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், சகல அரச மற்றும் அரச சார்பற்ற சேவையில் ஈடுபட்டுள்ளோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago