Freelancer / 2026 ஜனவரி 08 , மு.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவித்துள்ளது.
இதுகுறித்து கே.வி.என். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எங்களது மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் இந்தத் தகவலை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9 ஆம் திகதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'ஜனநாயகன்' படத்தின் வெளியீடு, எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த முடிவு எங்கள் யாருக்கும் எளிதானதாக இல்லை. புதிய வெளியீட்டுத் திகதி விரைவில் அறிவிக்கப்படும்.
அதுவரை, உங்கள் பொறுமையையும் அன்பையும் தொடர்ந்து வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களது அசைக்க முடியாத ஆதரவே எங்களது மிகப்பெரிய பலம் மற்றும் ஒட்டுமொத்த 'ஜனநாயகன்' குழுவினருக்கும் அதுவே எல்லாமும் ஆகும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)
8 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago