2021 மே 15, சனிக்கிழமை

’ஜெனீவா விடயத்தில் இந்தியாவை நம்புகிறோம்’

Editorial   / 2021 மார்ச் 03 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான விடயம் குறித்து, இந்தியா சரியான தீர்மானத்தை எடுக்குமென இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறது எனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல,துறைமுக பிரச்சினையானது வர்த்தக ரீதியிலான பிரச்சினை என்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினையானது இரு நாடுகளுக்கிடையிலான நீண்ட நாள் நட்புறவு தொடர்பான விடயமாகும் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (3) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பான நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இந்தியா இருந்து வருவதாகத் தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டு இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் அவமானத்துக்குரிய செயற்பாடு காரணமாகவே, நாட்டின் பிரஜை என்ற ரீதியில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளோம் என்றார். 
'எமது இராணுவத்தினர் தொடர்பான கருத்துகள், மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டன. இதனால் பல நாடுகளுக்கு இலங்கை குறித்து அதிருப்தி ஏற்பட்டது. அதேவேளை, எமது உண்மையான நிலையைப் புரிந்துகொண்டு, பல நாடுகள் எமக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளன' என்றார்.


முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பால் வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள் துன்பங்களை அனுபவித்தனர். இவர்களால் பிள்ளைகள் கடத்தப்பட்டனர் எனத் தெரிவித்த அமைச்சர்,  எனினும்இ யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு மக்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ளனர் என்றார். 

'இந்தியாவையோ அமெரிக்காவையோ ஓரமாக்கிவிட்டு, மனித உரிமைகள் பேரவையில் நாம் எதையும் முன்வைக்கவில்லை. எமக்கெதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் நியாயமற்றதென அமெரிக்கா, இந்தியாவுக்கு நாம் காரணங்களை முன்வைத்துள்ளோம். இது நியாயமற்றது; எந்த விடயத்தில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை' என்றார். 

எனவே, இந்த நியாயமற்ற விடயத்தில், பங்குதாரராக இந்தியா அமையாது என்ற நம்பிக்கை, எம்மிடத்தில் உள்ளதெனத் தெரிவித்த அவர், இந்த அநியாயத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுடன் தொடர்புகொண்டு, அந்த அநியாயத்தை நியாயப்படுத்த வேண்டாம் எனக் கேட்பதாகவும் குறிப்பிட்டார்;.

'சத்தியத்தை வெல்வோம்' என நம்பும் அதேவேளைஇ உலகின் பல பிரபல நாடுகள் எமது யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். அதிகாரம்மிக்க நாடுகள்இ எமக்கான ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில்இ அரசியல் காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்தவர்களின் தேவைக்காகவும்  ஆதரவாகச் செயற்படுபவர்கள் தொடர்பிலும் நாம் அறிவோம்' என்றார்.

'அவர்களின் தேவை என்னவென்பது குறித்தும் நாம்  சுட்டிக்காட்டியுள்ளோம். எனவேஇ இந்தியா நியாயத்தின் பக்கம் நிற்கும் எனத் தீவிரமாக நம்புகின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .