Editorial / 2019 ஜூலை 14 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல், மோசடி ஆகியவற்றை ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் பதவி காலம் இம்மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய, இதன் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி வரை இதன் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதியிலிருந்து 2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஜனவரி மாதம் 16ஆம் திகதி இந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago