2025 மே 17, சனிக்கிழமை

ஜனாதிபதிக்கும் எனக்கும் தூக்கம் இல்லை: ரணில்

Gavitha   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எனக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தூக்கம் வருவதில்லை என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, சிலர் தூங்கிவிட்டதால் தாங்கள் இவ்வாறான நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 69ஆவது மாநாடு, கட்சியின் தலைமையகமான சிறி கொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த மாநாட்டுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் வருகைதந்திருந்தனர்.

நாங்கள் புதியவன பற்றி சிந்திக்க வேண்டியிருக்கின்றது. தற்போது இருக்கின்ற அரசியல், பொருளாதார வரையறைக்குள் இருந்துகொண்டு முன்னோக்கி செல்ல முடியாது. அதிலிருந்து நாம் வெளியில் வரவேண்டும்.

கட்சி என்றவகையில் பிரிவுபட்டு துண்டங்களாகி சண்டையிட்டு கொள்ளவேண்டுமா? கட்சி என்றவகையில் சண்டையிட்டுகொள்ள விருப்பமா என்று கேட்பதற்கு எனக்கும் விருப்பம்தான்.

நாங்கள் அனைவரும் இணைந்து இணக்கப்பாட்டுடன் தேசிய அரசாங்கத்தை அமைத்தோம். உங்கள் கைகளுக்கு நல்ல இலாபம் செல்லவேண்டும் என்றுதான் அதனை நாம் நிர்மாணித்தோம்.

தேசிய அரசாங்கம் என்பது நான்கு சாலைகள் கொண்ட அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கின்ற ஹைபிரட் போன்றது. போகும் நேரத்தை சொல்லமுடியும். ஆசனப்பட்டியை அணிந்துசெல்லாவிட்டால் விபத்துக்கு முகம்கொடுக்கவேண்டியதுதான்.

எங்களுடைய ஹைபிரட்டில் ஆசனப்பட்டி இருக்கின்றது. அதனை நாங்கள் அணிந்திருக்கின்றோம். எனக்கும் ஜனாதிபதிக்கும் தூக்கம் வருவதில்லை. ஏனையோர் தூங்கிவிட்டனர். ஆதனால் தான் நாங்கள் இவ்விடத்துக்கு வந்துள்ளோம். 60 மாதங்களில் புதிய நாட்டை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்போம் என்று நான் கூறுகின்றேன்.

சஜித் பிரேமதாஸா உரை

இந்த மாநாட்டில் பங்கேற்க கட்சியின் உப-தலைவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ உரையாற்றுகையில்,

வீடமைப்பு , புதிய தொழிற்துறையை ஏற்படுத்துதல் மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினையிலிருந்து தீர்வு பெற்ற இலங்கையை உருவாக்குவதே தேசிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .