Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 10 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளக்கேற்றி இருளை அகற்றுவோம்
உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் தீபாவளித்திருநாள் உலகிலிருந்து தீயசெயல்களைப் போக்கி நற்செயல்களை நிலைநாட்டுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளமையால், ஏனைய உலக மக்களுக்கும் இத்திருநாள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகக் காணப்படுகிறது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலகை சிறந்ததோர் இடமாக மாற்றுவதற்கு மனித நாகரிகத்தின் ஆரம்பகால யுகங்களிலிலும் மனிதனால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற உண்மை தற்போதைய தீபாவளிக் கொண்டாட்டங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளக்கூடியதாயுள்ளது.
ஒளிவிளக்குகளை ஏற்றுவதன் மூலம் உருவாகும் ஒளியானது, இருளை அகற்றுவதைப் போன்று தீபாவளியின் தீப ஒளி அனைத்து மனித மனங்களிலும் ஒளி வீசுவதன் காரணமாக அவர்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கம் உலகின் அனைத்து நாகரிகங்களுக்கும் உரித்தான மனிதர்களின் பொதுவான பிரார்த்தனையாக மாற்றமடைகின்றது.
அது பேதங்கள் எதுவுமற்ற ஐக்கியம் அரசாட்சி செலுத்தும் இவ்வுலகின் இருப்புக்குத் தேவையான அடிப்படை நிபந்தனை என்பதை மிகவும் பிரகாசமான விளக்கொளி பூஜையின் மூலம் எமக்கு வலியுறுத்துகிறது.
இவ்வாறான நற்செயல்களை நோக்கமாகக் கொண்ட பொதுவான பழக்கவழக்கங்களினூடாகவே மானிடப் பரிணாம வளர்ச்சியானது, பயனுறுதி வாய்ந்ததாக இன்றுவரை வியாபித்துள்ளது. இவ்வாறு அனைத்து காலங்களுக்கும் பொருந்துகின்ற தீபாவளி போன்ற விழாக்கள் ஆன்மிக வழிபாட்டுப் பழக்க வழக்கங்களின் மூலம் தூய்மைப்படுத்தப்படுவதன்
காரணமாக அதன் உன்னத குணவியல்புகள் எதிர்காலத்திலும் நிலைத்திருத்தல் இன்றியமையாததாகும். இலங்கையில் வாழும் சகல இந்துக்களுக்கும் 'இதயபூர்வமான பக்திப்பெருமித தீபவொளி வீசும் தீபாவளிப் பண்டிகை' மலரட்டும் என பிரார்த்திக்கின்றேன்.
தீயவை விட்டொழியட்டும்
தீமை தோற்கடிக்கப்பட்டு நன்மை வெற்றி பெறுவதனை அடையாளப்படுத்தி, உலகவாழ் இந்து பக்தர்கள் தீபங்களை ஏற்றி, இன்று தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்துக்களுக்கு தீங்கிழைத்த நரகாசுரன் எனும் கொடிய அரக்கனைத் தோற்கடித்த தினத்தையும் இளவரசன் இராமன் வனவாசத்திலிருந்து மீண்டு, சீதையுடன் மீண்டும் அயோத்திக்கு வருகைதந்த தினத்தையும் விசேடமாக தீபாவளித் தினம் நினைவுபடுத்துகின்றது. இந்த அனைத்து தெய்வீகக் கதைகள், பழக்கவழக்கங்களிலிருந்து மனிதர்களிடம் காணப்படும் தீய எண்ணங்களை விட்டொழித்து நன்மையெனும் ஒளியை ஏற்ற வேண்டும் என்பதையே எமக்கு வலியுறுத்துகின்றன.
கடவுள் மீது கொண்ட தீராத பக்தியுடன் தீபாவளி தினத்தில் மேற்கொள்ளப்படும் சமயக் கிரியைகள் ஊடாக தன்னுள் குடிகொண்டிருக்கும் மமதை, பேராசை, பொறாமை, போன்ற தீய குணங்கள் களைந்து நற்பயனை அடைந்து கொள்ள முடியுமென்பது இந்து மத நம்பிக்கையாகும். அதற்கமைய இது இந்துக்களுக்கு மாத்திரமின்றி அனைத்து மக்களுக்கும் முன்மாதிரியை எடுத்தியம்பும் சமயப் பண்டிகை என்பதில் விவாதத்துக்கு இடமில்லை.
இலங்கையர் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன, மத பேதங்களை மறந்து சமாதானமாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு மனதில் உறுதி பூணுவதுடன் எமது உள்ளங்களை மனித நேயத்தினைக் கொண்டு ஒளியேற்றுவோம். அப்போது தான் தீபாவளிப் பண்டிகை அர்த்தமிக்கதாக அமையும்.
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்லாசிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
1 hours ago