2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஜனாதிபதி மாளிகையின் வனப்பை 14 வரை பார்க்கலாம்

Thipaan   / 2016 ஜூன் 07 , பி.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் வனப்பை, பொதுமக்கள் பார்வையிடுவதற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

இன்று புதன்கிழமை (08), பிற்பகல் 2 மணிமுதல் பார்வையிடலாம். அதனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பார்.

இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையிலும் பார்வையிடலாம். 29 ஆளுநர்கள் மற்றும் 6 ஜனாதிபதிகள், இந்த ஜனாதிபதி மாளிகையை தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகவும் அலுவலகமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்கு விரும்புவோர், ஜனாதிபதியின் உதவி செயலாளர் (விசாரணை) 0773086366 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களை கேட்டறிந்துகொள்ளலாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .