2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம்

Editorial   / 2018 நவம்பர் 28 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜா-எல பிரதேசத்தில் அமைந்துள்ள நகை கடையொன்றில் நேற்று (27) இரவு, ஆயுதங்களுடன் மோட்டார் வாகனத்தில் வந்த மூன்று இனந்தெரியாத நபர்களால், அங்கிருந்து 6 இலட்சத்துக்கும் அதிகமானளவில் பெறுமதியுடைய தங்காபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த கடையில் பணியாற்றும் ஊழியர்களை துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பின்னர் தப்பி சென்றதாகத் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் துப்பாக்கிச்சூட்டு பிரயோகத்தை அங்கு மேற்கொண்ட போதிலும், எவருக்கும் காயமேற்படவில்லையென பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை  கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .