2025 மே 22, வியாழக்கிழமை

ஜெனீவா குற்றவாளிக் கூண்டில் கைகட்டி நிற்க வேண்டியதில்லை

Thipaan   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியும், பிரதமரும் ஒன்றிணைந்து ஏற்படுத்தியுள்ள தேசிய அரசாங்கத்தின் பயனாக, இனிமேல், ஜெனீவா முன்னால் சென்று குற்றவாளிக் கூண்டில் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாதென தாம் நம்புவதாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில், நேற்று புதன்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் ஹக்கீம் அங்கு கருத்துத் தெரிவிக்கும் போது மேலும் கூறியதாவது,

கடந்த ஜனவரி 8ஆம் திகதியிலிருந்து இந்த நாட்டில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்தைத் தொடர்ந்து, இந்த அரசாங்கத்துக்கு முன்னைய ஆட்சியாளருக்குமிடையிலிருந்த வேறுபாட்டை ஒப்பிட்டு நோக்கும் போது, பல விடயங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

2009ஆம் ஆண்டு கோர யுத்தத்தை வெற்றிக்கொண்ட பின்னணியில், நாடு படிப்படியாக சமாதானத்தை இழந்துகொண்டு வந்தது. சமாதானத்தை இழக்கின்ற ஒரு சூழ்நிலை, இவ்வளவு வேகமாக உருவாகிவிடும் என அப்போது நாங்கள், முன்னர் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.

எங்களுடைய அரசாங்கத்துக்கு  ஒரு வருடம் நிறைவடைகின்ற நிலையில், நாங்கள் மிகுந்த திருப்தியோடு திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு யுகத்தை உருவாக்கியிருக்கிறோம் என, மிக மகிழ்ச்சியோடு கூறிக்கொள்ளலாம்.

2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுகளில், நாட்டில் ஏதாவது ஓர் இடத்தில் நாள் தோறும் சமயரீதியான, இனரீதியான வன்முறைச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள் நடந்துகொண்டிருந்தன. அவ்;வாறானதொரு மோசமான சூழ்நிலையை உருவாக்கிய ஆட்சியாளர்களை ஒதுக்கிவிட்டு, புதியதோர் அரசியல் கலாசாரத்தை உருவாக்கியது மாத்திரமல்ல, வெளிப்படைத்தன்மையுள்ள அரசியல் கலாசாரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த வெளிப்படைத்தன்மை அரசியல் கலாசாரத்தின் மூலம், இந்;த நாட்டில் இடம்பெற்ற மதரீதியான அசம்பாவிதங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது மாத்திரமல்லாமல், சர்வதேசத்தின் முன்னால் ஒவ்வொரு வருடமும், குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றதை போன்று அவமானப்படுத்தப்பட்ட ஒரு தேசியமாக இருந்த நாங்கள் இப்போது, தைரியமாக அதே சர்வதேச சமூகத்துக்கு முன்னால் தலை நிமிர்ந்து நிற்கின்றோம் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X