2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜெயாவின் உடல்நிலை கவலைக்கிடம்: அப்பலோ அறிக்கை

George   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் சென்னை அப்பலோ வைத்தியசாலையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அப்போலோ வைத்தியசாலையின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜெயாவின் உடல்நிலை குறித்து, அப்பலோ வைத்தியசாலை, இன்று திங்கட்கிழமை  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் நிலை தொடர்ந்து சிக்கலாக உள்ளது. அவருக்கு எக்மோ கருவி மற்றும் பிற உயிர் காக்கும் கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் வைத்தியசாலை வைத்தியர்கள் குழு, சென்னைக்கு விரைந்துள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணியளாவில் எய்ம்ஸ் வைத்தியர்கள் குழு, சென்னையை வந்தடைவார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .