Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 26 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு, புத்த சாசன அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது தொடர்பாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதில், மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருன்காந்த உள்ளிட்டவர்கள், மேற்படி தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கடிதங்கள் மூலம் கோரியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள், சுதந்திர தினத்தன்று ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த விடயத்தில், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பதாக அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவும் மேற்படி கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
30 minute ago
48 minute ago