2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

டான் பிரியசாத் சுட்டுக் கொலை: தந்தை மகனுக்கு பயணத்தடை

Editorial   / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தந்தை மற்றும் மகன் இருவரும் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல  வெளிநாட்டுப் பயணத் தடையை, புதன்கிழமை (23) விதித்தார்.

வெல்லம்பிட்டிய பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த வெளிநாட்டு பயணத் தடை பிறப்பிக்கப்பட்டது.

டான் பியசாத்தின் கொலைக்குக் காரணமானவர் வெல்லம்பிட்டியவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஆறாவது மாடியில் உள்ள ஒரு உறவினரின் வீட்டில் செவ்வாய்க்கிழமை (22) இரவு இருந்தபோது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக வெல்லம்பிட்டிய பொலிஸார், நீதிமன்றத்தில்  அறிக்கையை சமர்ப்பித்து, ​​ நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய தரப்பினருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக பகை இருந்ததற்கான சான்றுகள் வெளியாகியுள்ளன, அதன்படி, இரண்டு சந்தேக நபர்களையும் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X