2026 பெப்ரவரி 06, வெள்ளிக்கிழமை

’பல பாடசாலைகளை மூடுவதற்கு ஏற்பாடு’

Freelancer   / 2026 பெப்ரவரி 06 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பல பாடசாலைகளை மூடுவதற்கும்  இலவச கல்வியை கட்டுப்படுத்தவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் தொடர்பில்  அரசாங்கம் தெளிவான பதிலொன்றை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) அன்று  பிரதமரிடம்  இடையீட்டு கேள்வி ஒன்றை எழுப்பியே இதனை வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,

 நாட்டில் எந்த பாடசாலையையும் மூடப்போவதில்லை என பிரதமர் தெரிவிக்கின்றபோதும், நாட்டில் பல பாடசாலைகளை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மட்டங்களில் இருந்து எங்களுக்கு அறியக்கிடைக்கிறது. இது தொடர்பில் எங்களுக்கு முறையான பதில் ஒன்று  வேண்டும். .

அதேபோன்று ஆசியரிகளின் கோரிக்கையான எஞ்சிய மூன்றில் இரண்டு கொடுப்பனவை வழங்குவதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அந்த வாக்குறுதி தற்போது மறக்கப்பட்டுள்ளது .அதேபோன்று பாடசாலை கட்டமைப்பில் பெற்றோர்களிடம் பணம் சேகரித்து, பாடசாலைகளுக்கு தேவையான தொலைக்காட்சி, ஸ்மாட் பலகை போன்ற உபகரணங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, இலவச கல்வியை பாதுகாத்து, பாடசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை கல்வி அமைச்சினூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று அரசாங்கம் கல்வி நடவடிக்கையை டிஜிட்டல் மயமாக்க கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்திருக்கிறது. ஆனால் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இருந்து 5ஆம் தரம் வரை தகவல் தொழிநுட்ப பாடவிதானம் கற்பிக்க ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால் எமது பாடசாலைகளில் தகவல் தொழிநுட்ப பாடம் 6ஆம் வகுப்பிலே ஆரம்பிக்கப்படுகிறது. டிஜிட்டல்  மயமாக்கல் அரசாங்கத்தின் கொள்கை என்றால், முதலாம் தரத்தில் இருந்து தகவல் தொழிநுட்ப கல்வியை ஆரம்பிக்க வேண்டும். அது ஆங்கில மொழியிலே மேற்கொள்ள வேண்டும். அந்த விடயங்களும் செயற்படுத்தப்படவில்லை  என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X