J.A. George / 2023 ஜனவரி 05 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, டுபாய் பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை (5) காலை நாடு திரும்பினார்.
கோட்டாபய ராஜபக்ஷ டிசெம்பர் 26 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் அமெரிக்காவுக்கு செல்வதாக தகவல் வெளியானது.
அவருடன் மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த ராஜபக்க்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ மற்றும் அவரது பேரக்குழந்தையும் சென்றிருந்தனர்.
அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுபாயின் தனியார் ‘ஃபேம் பார்க்’ இல் உரிமையாளர் சைஃப் அஹமட் பெல்ஹாசா மற்றும் பல விலங்குகளுடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


29 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
46 minute ago