2021 ஜூன் 17, வியாழக்கிழமை

​டிமிக்கி கொடுக்கும் அமைச்சர்

Niroshini   / 2021 மே 10 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.நிரோஸ்

அரசாங்கத்திலிருக்கும் அமைச்சர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த போதிலும், இதுவரையில் அவர், தனிமைப்படுத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

அந்த அமைச்சரின் வீடு இருக்கும் பிரதேசமும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது காரியாலயம், இல்லத்திலேயே இயங்கி வருகின்றது. காரியாலயத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஐவருக்கு கொ​ரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

அமைச்சரின் மருமகன் மற்றும் மருமகனின் சாரதி உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அவ்வீட்டில் மட்டும் சுமார் 11 பேர் வசித்துவருகின்றனர்.

இது தொடர்பில், அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வினவியபோது, “தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய அந்த அமைச்சர், தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இது தொடர்பில் அவருக்கு அறிவுறுத்தியும் அவர் அதனைக் கேட்கவில்லை.

“தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவர், பல கூட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பாகவும் எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. தனியார் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்டுள்ளதாக அமைச்சர் கூறுகின்றார். எனினும், அந்த அறிக்கையை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றார்.

புத்தாண்டுக்குப் பின்னர், ஒவ்வொரு கிராமசேகவர் பிரிவு, பொலிஸ் பிரிவுகள் பல பிரிவுகள் முடக்கப்பட்டன. இன்னும் சில பிரிவுகள் விடுவிக்கப்பட்டன. இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் இருக்கும் பிரிவொன்று முடக்கப்பட்டது. எனினும், ஒருசில மணிநேரத்தில் அப்பிரிவு விடுக்கப்பட்டது. அமைச்சரொருவரின் அறிவுறுத்தலின் பிரகாரமே அப்பிரிவு உடனடியாக விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்திருந்தன.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தனிமைப்படுத்திக்கொள்ளாத அந்த அமைச்சரின் வீடும் அப்பிரதேசத்திலேயே இருப்பதாக அறியமுடிகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .