Simrith / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று (30) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடங்கியது.
கடவுச்சீட்டு பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் தவறான தகவல்களை சமர்ப்பித்ததாகவும், செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் வசித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நடவடிக்கைகளின் போது, முன்னாள் அமைச்சர் கமகேவிடம் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன, அங்கு அவர் தான் குற்றமற்றவர் என்று அறிவித்தார்.
அதனையடுத்து அரச சட்டத்தரணி அகில தர்மதத்தின் வழிகாட்டுதலின் கீழ், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ஹன்சிகா குமாரசிறியிடமிருந்து சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் நீதிமன்றம் சாட்சியங்களை மேலும் விசாரிப்பதை டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில், டயானா கமகே மீது ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் சிஐடி இந்த வழக்கைப் பதிவு செய்தது.
ஜூலை 14, 2016 முதல் நவம்பர் 1, 2020 வரை செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் வசித்தமை, கடவுச்சீட்டு பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தவறான தகவல்களை வழங்கியமை ஆகியவை டயானா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆகும்.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago