Freelancer / 2022 டிசெம்பர் 20 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில், சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத், செவ்வாய்க்கிழமை (20) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரியே குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் கமகே பிரித்தானியக் குடியுரிமை பெற்றுள்ளதாகவும் எனவே இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குவது, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு எதிரானது என்றும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கையானது அதிகார துஷ்பிரயோகம் என்றும் இது குறித்து ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .