Janu / 2025 ஒக்டோபர் 09 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞர்களுக்கு நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்த டெட்டோ மல்லி என்ற இளைஞனை நீண்ட காலமாக தேடி வந்த நிலையில் அவர் புதன்கிழமை(8) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை எரிபொருள் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆலையடி வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 25 வயதுடையவர் எனவும் அவரிடமிருந்து 1 கிராம் 520 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்

01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025