2026 மே 02, சனிக்கிழமை

டொலர்களை அச்சிட்டவர் சி.ஐ.டி.யால் கைது

Nirosh   / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலியான அமெரிக்கா டொலர்களை அச்சிட்ட சந்தேகநபர் ஒருவர், அநுராதபுரத்தில் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

போலியான அமெரிக்க டொலர்களை அச்சிட்டமைத் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, கண்டலே, அநுராதபுரத்தைச் சேர்ந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினூடாக மேற்குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .