Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 08 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் டெங்கு நோயாளிகள் 7600 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக மேல்மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் டொக்டர் தீப்தி பெரேரா தெரிவித்துள்ளார்.
முறையற்ற விதத்ததில் வீசப்படும் குப்பைகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலையை இல்லாது செய்ய 4 வர்ணங்களிலான பைகள் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அதற்கமைய கீழ்வரும் நிறத்திலான பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி குப்பைகளை வேறுபடுத்தி போடும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஓரேன்ஞ் - பிளாஸ்ரிக்
நீலம் - கடதாசி
மஞ்சள் - பொலித்தீன்
பளுப்பு நிறம் - உலோக பொருட்கள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .