2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

டியூவின் மனுவை விசாரிக்க முடிவு

Thipaan   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த 11 பேரை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தமையை இரத்துசெய்யுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் டியூ குணசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மேலும் ஆதாரம் சேர்ப்பதற்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதியன்று ஆதாரத்தைச் சேர்த்துகொள்ள முடியும் என்று அறிவித்துள்ள உயர்நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கும் அறிவித்தல் அனுப்பியுள்ளது.

இந்த மனுவை, நீதியரசர் பிரியந்த ஜயவர்தன இல்லாத நீதியரசர் குழு முன்னிலையில் அன்றையதினம் ஆராய்வதற்கு உயர்நீதிமன்றம், நேற்று தீர்மானித்தது.

இந்த மனுவை விசாரிப்பதற்கு தனக்கு விருப்பமில்லை என்று, நீதியரசர் பிரியந்த ஜயவர்தன அறிவித்ததையடுத்தே உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு தீர்மானித்துள்ளது.

முறைப்பாட்டாளரின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் சகலருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறும் உயர்நீதிமன்றம் பணித்துள்ளது.

தேசியப் பட்டியல் எம்.பி.யாக தன்னை நியமிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு கட்டளையிடுமாறு மனுதாரரான டியூ குணசேகர, தனது மனுவில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .