2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தேங்காய் தலையில் விழுந்ததில் குழந்தை பலி

Editorial   / 2025 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பக்கத்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த ஒரு குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்ததில் குழந்தை உயிரிழந்ததாக உடசிறிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம், வென்னப்புவ, பண்டிரிபுவ பகுதியில்   சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில்   வென்னப்புவ, பண்டிரிபுவ பகுதியைச் சேர்ந்த ஜீவன் சஸ்மின் என்ற இரண்டு வயது குழந்தையே உயி​ரிழந்தள்ளார். அண்டை வீட்டில் வசித்து வந்த மற்றொரு குழந்தையுடன் அந்த வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்தது.

 

  குழந்தை மயக்கமடைந்ததால், சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர், மூத்த குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு குழந்தையை உடனடியாக லுனுவில மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

 

அதன்படி, ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனை அதிகாரிகள் மாரவில மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மோசமான நிலை காரணமாக, குழந்தை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது, ஆனால் குழந்தை அங்கேயே இறந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X