2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தங்காலை போதைப்பொருள் ; லொறி உரிமையாளர்கள் கைது

Janu   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலையில் திங்கட்கிழமை (22) அன்று 3 லொறிகளில் இருந்து மீட்கப்பட்ட மொத்த போதைப்பொருள் அளவு 705 கிலோ ஆகும். 3 லொறிகளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் கல்கிஸ்ஸை, எல்பிட்டிய மற்றும் மீட்டியாகொட பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 'உனாகுருவே சாந்த' என்ற குற்றவாளியின் ஊடாக இந்த போதைப்பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .