Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Simrith / 2025 ஜூலை 07 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் 21 வயது மகள், லஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் செய்திகள் கடந்த வாரம் வெளிவந்தன.
அந்த வகையில், சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகளை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு ரூ.50,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை ரூ.175,000க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனால் நோயாளிகளுக்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, மருத்துவர் அதிகாரப்பூர்வ மருத்துவமனை நடைமுறைகள் மூலம் அறுவை சிகிச்சை பொருட்களை வாங்காமல் பொது சேவை கொள்முதல் விதிகளை மீறியதாகக் கூறியது.
அதற்கு பதிலாக அந்தப் பொருட்கள் அவரது தனியார் நிறுவனம் மூலம் சுமார் 300 நோயாளிகளுக்கு விற்கப்பட்டன.
பல நாட்களாக மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மகேஷி விஜேரத்ன அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதும் சமீபத்தில் தெரியவந்தது.
குறித்த வைத்தியரும் அவரின் மருத்துவ மோசடிக்கு உதவிய அவரது இரண்டு கூட்டாளிகளும் தற்போது தடுப்புக் காவலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago