Niroshini / 2021 மே 28 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு இரண்டாம் தலைமுறை, தடுப்பூசி மருந்தை கண்டறியவேண்டிய தேவை ஏற்படலாமெனத் தெரிவித்துள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் பணிப்பாளரான வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர, தடுப்பு மருந்தை உள்ளூரில் தயாரித்தால் அதுவே சிறந்ததொரு நகர்வாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
“கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தயாரிக்கப்பட்டுள்ள சகல தடுப்பூசிகளும் சீனாவில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்டதாக கூறப்படும் சீன கொவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்த தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளாகும்” என்றார்.
கொரோனா வைரஸ் உருமாறி, பிரித்தானியா, இந்தியா, பிரேசில், இத்தாலி போன்ற வைரஸுகளாக மாறி பரவிக்கொண்டுள்ளன எனத் தெரிவித்த அவர், ஆகையால் இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்தை கண்டறிவதே உசித்தமானது என்றார்.
கொவிட் -19 குடும்பத்தை சேர்ந்த 70 வகையான வைரஸ்கள் பரவிக்கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவ்வாறு இருக்கையில் சீன வைரஸைக் கட்டுப்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் மூலமாக ஏனைய வைரஸ்களை கட்டுபடுத்த முடியுமா? என்றும் வினவினார்.
இலங்கையில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியுமெனில் அது மிகச்சிறந்த நகர்வாகும் என்றும் தெரிவித்த அவர், உலகில் பல நாடுகள் தமக்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்துகொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026