Niroshini / 2021 மே 25 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக நாடுகளில் தற்போது பாவனையில் இருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளால், அந்தத் தொற்றினால் ஏற்படக்கூடிய மரண வீதங்கள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன என்று, அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விஞ்ஞானிகளால் செய்யப்பட்டுள்ள ஆய்வொன்றின் போதே, இந்த விடயம் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.
ஃபைஸர், மொடர்னா, ஜொன்சன் அண்ட் ஜொன்சன், சினோவெக் மற்றும் சைனொஃபாம் ஆகிய அனைத்துத் தடுப்பூசிகளாலும், கொரோனா மரணங்கள் தடுக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாக்கப்படுகின்றனர் என்றும், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், உலக நாடுகளில் தற்போது திரிபடைந்துள்ள கொரோனா வைரஸ்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய உயர்ந்த எதிர்ச் சக்திகளை, ஃபைஸர் தடுப்பூசி கொண்டிருக்கிறது என்றும், அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago