Janu / 2026 ஜனவரி 28 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் யாழ். சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப் படைப்பிரிவு முகாமில் புதன்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது.
குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய எச்.எம்.டபிள்யூ.பீ. பண்டார என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயிற்றுப் பகுதியில் படுகாயமடைந்த ராணுவ சிப்பாய் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் அறியப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
நிதர்ஷன் வினோத்
9 minute ago
13 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
23 minute ago