2025 மே 19, திங்கட்கிழமை

’தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்’

Freelancer   / 2025 மே 19 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில்  உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்க நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

 உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில்  உறுதி ஏற்போம்.
 
மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும். மாமக்கள் போற்றுதும், மாவீரம் போற்றுதும் எனப் பதிவிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X