2026 மார்ச் 04, புதன்கிழமை

துபாய்க்கு நான்கு விமானங்கள் பறந்தன

Editorial   / 2026 மார்ச் 04 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி. கபில

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புதன்கிழமை (04) அன்று 04 விமான சேவைகள் இயக்கப்படுவதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அதன்படி, புதன்கிழமை (04) பிற்பகல் 01:34 மணிக்கு ஃபிட்ஸ் எயார் (FitsAir) நிறுவனத்தின் 8D-821 விமானமும், பிற்பகல் 02:30 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL-231 விமானமும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளன.

மேலும், புதன்கிழமை (04) இரவு 06:15 மணிக்கு ஃபிளை துபாய் (flydubai) நிறுவனத்தின் FZ-570 விமானமும், இரவு 09:50 மணிக்கு எமிரேட்ஸ் (Emirates) நிறுவனத்தின் EK-655 விமானமும் கட்டுநாயக்கவிலிருந்து துபாய் நோக்கிப் புறப்படத் தயாராக உள்ளன.

அதேபோல், புதன்கிழமை (04) அதிகாலை 12:00 மணிக்கு ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து ஸ்மார்ட் விங்ஸ் (Smartwings) நிறுவனத்தின் 3Z-7648 விமானம் சரக்குகளுடன் வருகை தந்தது. அதிகாலை 12:05 மணிக்கு ஃபிட்ஸ் எயார் (FitsAir) நிறுவனத்தின் 8D-822 விமானம் 133 பயணிகளுடனும் 06 ஊழியர்களுடனும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இவை தவிர, புதன்கிழமை(04) பிற்பகல் 04:50 மணிக்கு ஃபிளை துபாய் (flydubai) நிறுவனத்தின் FZ-569 விமானமும், இரவு 06:45 மணிக்கு எமிரேட்ஸ் (Emirates) நிறுவனத்தின் EK-654 விமானமும் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .