Editorial / 2020 ஜூலை 25 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு ஐடிஎச் வைத்தியாலையிலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும், கொரோனா தொற்றாளர் தான் சுற்றித்திறிந்த இடங்கள் தொடர்பாக வழங்கிய தகவல்கள்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
குறித்த தொற்றாளி வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவுடன், வைத்தியசாலையின் அருகிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடைகளை மாற்றிக்கொண்டு சென்றுள்ளார் எனவும், அந்த வீட்டிலிருந்த சைக்கிலொன்றையும் திருடிக்கொண்டு கொழும்பு கோட்டைக்கு சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அதனால் குறித்த நபர் நடமாடிய பகுதிகள் தொடர்பான சீசீடிவி விடியோக்களை மய்யப்படுத்தி பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகள் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளதுடன், இந்த நபர் ஆடை மாற்றுவதற்கான நுழைந்த வீடு தற்போது முழுமையாக தொற்றுநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமையாலும், அவருக்கு எதிராக தண்டனைச் சட்டகோவை, தனிமைப்படுத்தல் சட்டத்துக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago