Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Freelancer / 2022 மே 12 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக கடலோர பகுதிகளை உஷார்படுத்த மாநில காவல்துறைக்கு ஒன்றிய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிட்டதிட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிச்சூடு, மரண ஓலம், திரும்பிய பக்கமெல்லாம் தீ என வன்முறை பூமியாக மாறி உள்ளது இலங்கை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. .
இராணுவ மற்றும் அரச அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ராஜபக்ஷ குடும்பத்தினரால் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் தமிழர்கள் பகுதி பற்றி எரிந்தது என்றும் அந்த செய்திகள் தெரிவித்தன.
இலங்கையில் நிலவும் சம்பவங்களையும் இந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி அகதிகளுடன் தேச விரோதிகளும் நுழையலாம் என ஒன்றிய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக கடலோர பகுதிகளை உஷார்படுத்த வேண்டும். இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், போதைப்பொருள் கும்பல் கடல் வழியாக இந்தியாவுக்குள்
நுழைய வாய்ப்பு உள்ளது.
எனவே, தமிழக கடலோரப்பகுதிகளை தீவிர கண்காணிப்பில் தமிழக அரசு வைத்திருக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு ஒன்றிய உள்துறை அறிவுறுத்தியுள்ளது.
உள்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கடலோர ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
58 minute ago
4 hours ago