Freelancer / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று மாலையுடன் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். இதையடுத்து, வாக்குப்பதிவு நாளான நாளை 23 ஆம் திகதி மாலை 6 மணி வரையிலான 48 மணி நேர அமைதி கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்த நிலையில், நேற்று காலை முதல் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தான் போட்டியிடும் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தான் போட்டியிடும் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாகனப்பேரணி சென்று வாக்கு சேகரித்தார். நேற்று மாலையில் காரைக்குடி பாண்டியன் திரையரங்கம் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் நேற்று சென்னையில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். நந்தனத்தில் நடந்த பிரச்சாரத்தில் விஜய் கலந்துகொண்டு பேசினார். (a)
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago