2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’தமிழில் தேர்ச்சிபெற்றவரே ஜனாதிபதியாக வேண்டும்’

Editorial   / 2019 ஜனவரி 19 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் மொழியில் தெளிவு பெற்ற ஒருவரே, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படல் வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,

தற்போது, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை இழந்தே செயற்பட்டு வருவதாகவும் இந்தச் சூழ்நிலைக்கு அமைய, ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, சட்டவிரோதமானது என்று, நீதிமன்றமே உறுதிப்படுத்தியுள்ளமையால், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, அவர் வலியுறுத்தியுள்ளார்

அத்தோடு, சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள்  பேசும் தமிழ் மொழி  தொடர்பில், தெளிவு பெற்ற ஒருவரே, ஜனாதிபதியாக பதவிக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .