Freelancer / 2023 ஜனவரி 13 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனியாக போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் ஐந்து தமிழ் கட்சிகள் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்று (13) தீர்க்கமான பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தையில், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்
இதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று (120 சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். (a)

33 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
1 hours ago