Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்வதற்காக, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடு முழுவதிலுமுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதவரவைத் திரட்டுவற்கான தீவிர முயற்சியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வடக்கு, கிழக்கு மாகாணப் பிரசாரப் பணிகள், பிரதமரின் மேற்பார்வையின் கீழ் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக, பிரதமர் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாஸிம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட வழிநடத்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், மனோ கணேசன், ராஜித்த சேனாரத்ன, பழனி திகாம்பரம், பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
அந்த வகையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள் அடங்கிய மேல் மாகாணத்தின் பிரசாரப் பணிகளில், ஐ.தே.முவின் பொதுச் செயலாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் ஐ.தே.கவின் துணைத் தலைவர் ரவி கருணாநாயக்கவும் தலைமை தாங்கவுள்ளனர்.
15 minute ago
26 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
1 hours ago
2 hours ago