Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாணத்தில் சேவையாற்றிவரும் தமிழ் பொலிஸ் உத்தயோகத்தர்களை இலக்குவைத்து, அச்சுறுத்தல் கடிதமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் என்று குறிப்பிட்டு, “பிரபாகரன் படை” எனும் அமைப்பொன்றினால் உரிமை கோரப்பட்ட கடிதமொன்றே, இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்களும் உயிரிழந்த சம்பவத்தில் நியாயம் கிட்டும் வரை, தமிழ் பொலிஸ்
உத்தியோகத்தர்கள் அனைவரும், தங்களது சேவையிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்க வேண்டும் என, அக்கடிதத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வடமாகாண பொலிஸ் தலைமையகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை, வேறு பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறும், அதற்காக, 21 நாட்கள் காலக்கெடு வழங்கப்படுவதாகவும், அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தை அனுப்பியவர்கள் தொடர்பில், பொலிஸாரினால், விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago