2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தயா மாஸ்டருக்கு எதிரான விசாரணை நிறைவு

George   / 2016 டிசெம்பர் 05 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு எதிரான விசாரணை, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நிறைவடைந்துள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுத்தத்தின் இறுதித் தருணத்தில், ​பொதுமக்களை பிணயமாக பிடித்து  வைத்திருந்தாக, தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பொலிஸார், நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

தயா மாஸ்டர் மற்றும்  மொழிப் பெயர்பாளரான ​ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் மீதான விசாரணைகள் 2009ஆம் ஆ ண்டு புலனாய்வு பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இதற்கு முன்னர், ஜோர்ஜ் மாஸ்டர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .