2025 மே 20, செவ்வாய்க்கிழமை

“தேர்தல் தொடர்பில் ஆலோசிக்கவில்லை”

S.Renuka   / 2025 மே 20 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து அரசாங்கம் இன்னும் தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில்  தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கூறியுள்ளதாவது,

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமானால் தேர்தல் ஆணைக்குழு அந்தச் செயல்பாட்டில் ஒரு பகுதியாக இருக்கும்.

இருப்பினும், இந்த விடயத்தில் அரசாங்கம் இதுவரை தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசிக்கவில்லை.

 தேர்தலை நடத்துவதற்கு, எல்லை நிர்ணய செயல்முறை முடிக்கப்பட வேண்டும் அல்லது பழைய முறையின் கீழ் தேர்தல்களை நடத்த அனுமதிக்கும் வகையில் தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும்.

அரசாங்கம் எங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால், அவர்கள் இன்னும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X