S.Renuka / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு ஒத்துழைக்கும் வகையில், 3,250,000.00 ரூபாய் நிதிப் பங்களிப்பை இன்று வியாழக்கிழமை (04) பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த நன்கொடையை தேர்ஸ்டன் கல்லூரி நம்பிக்கை நிதியத்தின் (Thurstan College Trust Fund) தலைவர் நோயல் ஜோசப் வழங்கினார்.
இந்த மொத்த பங்களிப்பில் நம்பிக்கை நிதியத்திலிருந்து ரூ.2,250,000.00 மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள தேர்ஸ்டன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரிடம் இருந்து ரூ.1,000,000.00 என்பன உள்ளடங்குகின்றன. இது தேசிய நலன் மற்றும் அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கான தேர்ஸ்டன் சமூகத்தின் வலுவான கூட்டு ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது.
பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த (ஓய்வு) அவர்கள், நாட்டின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணத் திறன்களை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட சரியான நேரத்திலான மற்றும் அர்த்தமுள்ள ஆதரவுக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார். அத்துடன், நன்கொடையாளர்களின் தாராள மனப்பான்மை மற்றும் தேசிய உணர்வையும் பாராட்டினார்.
14 minute ago
20 minute ago
22 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
22 minute ago
28 minute ago