2026 மே 02, சனிக்கிழமை

திறைசேரியின் செயலாளருக்கு அரச நிதி பற்றிய குழு அழைப்பு

Freelancer   / 2026 ஏப்ரல் 29 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசுத் திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சைபர் தாக்குதல் ஊடாகக் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக, நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழு பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அண்மையில் திறைசேரி நிதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி மற்றும் அதன் பாதுகாப்புத் தன்மைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .