2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

தலதா கண்காட்சி தொடர்பில் போலி செய்தி

S.Renuka   / 2025 மார்ச் 24 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சி தொடர்பாக வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் ஒரு போலி விளம்பரம் தொடர்பில் ஸ்ரீ தலதா மாளிகையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஸ்ரீ தலதா கண்காட்சிக்கு யார் வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம் என்றும், பணம் நன்கொடை அளிப்பவர்கள் வங்கிக் கணக்கின் விவரங்களை வழங்கி அதில் பணத்தை வைப்பு செய்யுமாறு பதிவிடப்பட்டுள்ள விளம்பரம் போலியானது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன்,  ‘ ஸ்ரீ தலதா மாளிகைக்கு’ தேவையான அனைத்து வசதிகளும் ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்றும் ஸ்ரீ தலதா மாளிகை கூறியுள்ளது.

  ஸ்ரீ தலதா மாளிகை எந்தவொரு தனிநபர், குழு, அமைப்பு அல்லது வேறு எந்த வகையான நிதி திரட்டல் அல்லது வேறு எந்த நிறுவன நடவடிக்கையையும் நம்பவில்லை எனவும் கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X