2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

திலீபனுக்கு தலைநகர் கொழும்பில் அஞ்சலி

Editorial   / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விஜயரத்தினம் சரவணன்

தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் தேசங்களில் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இலங்கைத் தலைநகர் கொழும்பில் தியாக தீபம் திலீபனுக்கு 26.09.2025இன்று இறுதிநாள் அஞ்சலிகளைச்செலுத்தினார்.

குறிப்பாக தற்போது செப்டம்பர் மாதத்திற்கான இரண்டாவது மாதாந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெற்றுவருகின்றன. ஆகவே குறித்த பாராளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இலங்கைத் தலைநகர் கொழும்பில் தங்கியுள்ளார். இந்நிலையிலேயே அவரால் கொழும்பில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றப்பட்டு, மலர் தூவப்பட்டு உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .