Niroshini / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நான் யாரையும் குறை கூற மாட்டேன். ஆனால், எவரேனும் தவறு இழைத்தால், அவர்களுக்குக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ள அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, “அதை மூடிமறைக்க முற்றப்பட்டால், நான், நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறி, அதற்கு எதிராகக் குரல் கொடுப்பேன்” எனத் தெரிவித்தார்.
எதிர்காலத்தை உருவாக்குகின்ற உள்ளூராட்சி மன்ற அரசியலுக்குள், ஒழுக்கமுள்ளவர்களையே உள்வாங்க வேண்டும். இந்த நாடாளுமன்றத்தைப் புனிதமான இடமாக மாற்றியமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.நாடாளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற நிலையியற் கட்டளைச் சட்டம் ஒழுக்கக் கோவை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“சபாநாயகர் அவர்களே, உங்கள் கதிரையை திறம்பட வைத்திருக்க வேண்டும். எவரேனும் தவறிழைத்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“எதிர்காலத்தை உருவாக்குபவர்களும், ஒழுக்கமுள்ளவர்களும், அரசியலுக்குள் வர வேண்டும். இந்த நாடாளுமன்றத்தைப் புனிதமாக இடமாக மாற்றியமைப்பதற்கான செயற்பாடுகளை நான் முன்னெடுப்பேன்.“நான், நியாயமான முறையில் நடப்பவன். அதனால், யாரும் என்னை எதிர்ப்பதற்கில்லை. மேலும், நடத்தைக் கோவை விடயத்தில் நாம் கவனம் செலுத்தியாக வேண்டிய நிலையில் உள்ளோம். இதை நாம் புறந்தள்ளினால் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும்” எனத் தெரிவித்தார்.
5 minute ago
37 minute ago
48 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
37 minute ago
48 minute ago
56 minute ago