Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல பல்லகெடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலகம புதிய வீடமைப்புத் தொகுதியில் வசிக்கும் எண்பது (80) மற்றும் எழுபது (70) வயதுடைய தனது தாத்தாவையும் பாட்டியையும் கொன்ற பேரனை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை பல்லகெடுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த (04) திகதி இரவு பல்லகெடுவ புதுவீட்டில் வசிக்கும் ஆர்.டி.எட்வின் மற்றும் ஆர்.டி.குணவதி என்ற வயோதிப தம்பதியே கோடரியால் தாக்கப்பட்ட நிலையில் அவர்களது பேரன் அப்பகுதியை விட்டு ஓடிவிட்டான்.
சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவர் என்பதுடன் பாட்டி மற்றும் தாத்தாவுடன் வீட்டில் தங்கி சிறுவயதில் இருந்து அவர்களால் வளர்க்கப்பட்டுள்ளார்.(22) வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பல்லகெடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வை.எம்.பி.பி.குணரத்ன அவர்கள் பிரகதேசத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
மொனராகல சுமணசிறி குணதிலக்க
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago