Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2022 ஓகஸ்ட் 17 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் தாய்லாந்தில் புதன்கிழமை (17 ) குறைந்தது 17 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களில் எழுவர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல்கள் செவ்வாய்க்கிழமை (16 ) பின்னிரவுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் சில குண்டு வெடிப்புத் தாக்குதல்கள், தீயை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாநிலங்களில் உள்ள அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள், ஒரு பெட்ரோல் நிலையம் ஆகியவற்றைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் அந்நாட்டு பொலிஸாரும் இராணுவமும் வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
தாய்லாந்தின் தெற்குப் பகுதிகள் சிலவற்றில் பல ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
52 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
3 hours ago