Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 பெப்ரவரி 04 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாய் பேச முடியாத பெண்னொருவரிடமிருந்து 21 பவுண் தாலிக்கொடியை வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வாய் பேசமுடியாத பெண்ணொருவரிடம், அயலவரான யுவதி ஒருவர் விசேட நிகழ்வுகளுக்குச் செல்லும்போது, தாலிக்கொடியை இரவலாகப்பெற்று அணிந்து சென்று, பின்னர் அதனை மீள அப்பெண்ணிடம் கையளிப்பதனை வழமையாகக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், அண்மையில் வழமைபோல், தாலிக்கொடியை இரவலாக வாங்கி சென்ற யுவதி, தாலிக்கொடியை திருப்பி கொடுத்தபோது, கொடியின் அமைப்பில் வித்தியாசத்தை உணர்ந்த பெண், அதனை நகைக் கடை ஒன்றுக்குக் கொடுத்து சோதித்தபோது, அது போலியானது என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில் குறித்த பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்பேரில் , தாலிக்கொடியை வாங்கி சென்ற யுவதியை கைது செய்த பொலிஸார், அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தபோது, சுன்னாகம் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரவலாகப் பெற்ற தாலிக்கொடியை விற்பனைசெய்து, அதே போன்று போலி தாலிக்கொடியை அப்பெண்ணிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் குறித்த யுவதியை பொலிஸார் தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது .
எம்.றொசாந்த்
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago