Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 மே 18 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதான வீதியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், காருக்குள் இருந்த ஐ.டி. ஊழியர் குடும்பத்துடன் உயிர் தப்பினார்.
சோழிங்கநல்லூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி, சனிக்கிழமை (17) மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாடகை காரில் சோழிங்கநல்லூரை சேர்ந்த ஐ.டி. ஊழியரான விக்னேஷ் (45) என்பவர் மனைவி தன்யா (40) மற்றும் குடும்பத்தினர் அக்ஷயா (12). அத்வைத் (9) ஆகியோர் பயணித்தனர். காரை மரியதாஸ் (47) என்பவர் ஓட்டினார்.
டைடல் பார்க் சந்திப்பு ஓஎம் ஆர் சாலையில் (இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே) சென்று கொண்டிருந்த போது. திடீரென் வீதியின் நடுவே சுமார் 10 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட் டது. இந்த பள்ளத்துக்குள் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. காருக்குள் இருந்த 5 பேரும் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து போக்குவரத்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர்.
கிரேன் மூலம் காரை தூக்கி அப்புறப்படுத்தினர். காருக்குள் இருந்த 5 பேரும் கண்ணாடியை உடைத்து அடுத்தடுத்து மீட்கப் பட்டனர். விபத்தில் கார் ஓட்டுநர் மரியதாசுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப் பினர். அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதனிடையே, வீதியில் ஏற் பட்ட பள்ளத்தை சுற்றி தடுப்பு வேலிகள் போடப்பட்டது. இதனால், அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திடீர் பள்ளத்துக்கான காரணம் என்ன என்று தரமணி பொலிஸார் வழக்கு பதிந்து விசா ரித்து வருகின்றனர்.
திடீர் பள்ளம் தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதி காரிகள் கூறும்போது. "விபத்து ஏற்பட்ட பகுதியில் 2.2 மீ விட்டம் கொண்ட ராட்சத கழிவு நீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் வழி யாகத்தான் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழி வுநீர் பெருங்குடியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது . அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வரு கின்றனர்” என்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”மெட்ரோ ரயில் பணி நடை பெறும் இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் திருவான்மியூர் - தரமணி இடையே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள் ளம், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் எந்த பணியுடணும் தொடர் புடையது அல்ல என்பதை உறு திப்படுத்துகிறோம். அந்த பகுதி யில் அமைக்கப்பட்டுள்ள 2.2 மீ விட்டம் கொண்ட கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக. பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
18 minute ago
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
2 hours ago
2 hours ago