Freelancer / 2025 ஜூன் 07 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நகர அபிவிருத்தித் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம், கொழும்பு மாவட்டத்தில் கால்வாய் சுத்திகரிப்பு மற்றும் கழிவு முகாமைத்துவத் திட்டங்கள், நீர்த்திட்டங்கள் மற்றும் வீடமைப்பு உதவித் திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த வேலைத்திட்டங்கள் ஒவ்வொன்றும் திட்டமிட்ட உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். (a)

2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago